தரகம்பட்டி பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
தரகம்பட்டி பகவதியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தரகம்படி,
கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், மாணிக்கமலையான், மாரியம்மன், முத்தாலம்மன், பாம்பலம்மன், பசுபதியம்மன், முனியப்பசுவாமி, கருப்பண்ணசுவாமி, காமன்சுவாமி உள்பட பரிவார தெய்வகங்களும் உள்ளன.
மேலும் அனைத்து சுவாமிகளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 10-ந்தேதி தரகம்பட்டி ஊர் பொதுமக்கள் மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து யானை மீது புனிதநீரை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
கும்பாபிஷேகம்
தொடர்ந்து முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்து முடிந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை, 84 ஊர் மூன்று சபை சோழிய வெள்ளாளர் சங்க தலைவர் பாலகிருஷ்ணபிள்ளை, மாவட்ட தலைவர் மலைக்கொழுந்தாபிள்ளை தலைமையிலும், ஊர்கவுண்டர் மாரியப்பபிள்ளை, 24 மந்தை பெரியதனம், ஊர் நாட்டாமை பெரியசாமிபிள்ளை ஆகியோர் முன்னிலையிலும் மங்கள வாத்தியங்கள் முழங்க ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் பரம்பரை குருக்கள் சிவசுவாமிநாதர் சிவாச்சாரியர் மற்றும் சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்து வந்தனர். பின்னர் விநாயகர், மாணிக்கமலையான், மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், பாம்பலம்மன், பசுபதியம்மன், முனியப்பசுவாமி, கருப்பண்ணசுவாமி, காமன்சுவாமி ஆகிய கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.
திரளான பக்தர்கள்
கும்பாபிஷேக விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கீதா எம்.எல்.ஏ., முன்னாள் ஊராட்சி தலைவர் மாணிக்கம், ஒன்றிய செயலாளர் கண்ணன், ஊர்கவுண்டர் கிருஷ்ணன், பா.ஜ.க.மாவட்ட பொதுச்செயலாளர் கைலாசம், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், முன்னாள் ஒன்றியக்கவுன்சிலர் ராஜு, கோவில்பட்டி செல்வம், சிவம் ராஜேந்திரன், பால் கூட்டுறவு சங்க தலைவர் முனியப்பன், முருகேசன், முன்னாள் சேர்மன் செல்வராஜ் அரசு ஒப்பந்ததாரர்கள், கரூர், தரகம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story