மடத்துக்குளம் பேரூராட்சியில் 57 படுக்கைகளுடன் அரசு மருத்துவமனை - காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்


மடத்துக்குளம் பேரூராட்சியில் 57 படுக்கைகளுடன் அரசு மருத்துவமனை - காணொலிக்காட்சி மூலம்  முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:45 AM IST (Updated: 13 Dec 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பேரூராட்சியில் 57 படுக்கைகளுடன் அரசு மருத்துவமனையை காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்.

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மடத்துக்குளம் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் 57 படுக்கைகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் மற்றும் ரூ.1½ கோடி மதிப்பில் துங்காவியில் அரசு உயர்நிலைப்பள்ளியின் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார். இதில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். விழாவை கொண்டாடும் வகையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் அரசு மருத்துவமனையிலும், துங்காவி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் விழா நடந்தது.

நிகழ்ச்சியில் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த கால்நடைத்துறை செனட் உறுப்பினர் துரையரசன், செல்வராஜ், காளஸ்வரன், சுரேஷ்குமார், ரவி மற்றும் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story