ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி: கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - வடக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கினர்
ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை கடலூர் வடக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கினர்.
கடலூர்,
கடலூர் வடக்கு மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இதை மாவட்ட செயலாளர் என்ஜினீயர் எஸ்.ரவி வழங்கினார். விழாவில் மாவட்ட துணை செயலாளர்கள் ரஜினிபிரபாகர், ரஜினிமூர்த்தி, நகர செயலாளர் தாயுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து கடலூர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை மாவட்ட செயலாளர் என்ஜினீயர் ரவி வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் அய்யனாரப்பன், ஒன்றிய துணை செயலாளர் பத்மநாபன், பாபா சரவணன், நகர நிர்வாகிகள் மெக்கானிக் சீனு, முஸ்தபா, இளைஞரணி நிர்வாகிகள் ராமு, விஜயகுமார், ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடலூர் செம்மண்டலம் புருஷோத்தமன்நகரில் எஜமான் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மன்ற தலைவர் அறிவழகன் தலைமையில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் நடராஜன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
செம்மண்டலம் டி.இ.எல்.சி. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை உலக ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மன்ற தலைவர் பாபு, செயலாளர் சண்முகம் இலவச பாட புத்தகங்களை வழங்கினர். புதுப்பாளையம் தரைக்காத்த காளியம்மன் கோவிலில் ஏழையின் ராஜா ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மன்ற நிர்வாகிகள் முருகன், ரஜினிசங்கர், திலகர் ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜையும், ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் மன்றத்தின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கி, மரக்கன்று நடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூக்கடை சரவணன் செய்திருந்தார். வன்னியர் பாளையம் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுரேஷ் செய்திருந்தார். வண்டிப்பாளையம் கலைப்புலி ரஜினி மக்கள் மன்றம், மாவட்ட வர்த்தகர் அணி சார்பிலும் செல்வவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் பாலமுருகன் செய்திருந்தார்.
மாவட்ட மகளிர் அணி செயலாளர் லிஸி ஜோஸ்பின் சபரிநாதன் தலைமையில் சொரக்கல்பட்டு முதியோர் காப்பகத்தில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு, இலவச அரிசி வழங்கப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் குளோபல் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மதிய உணவை அனந்தநாராயணன், ராஜசேகர், மணவாளன் ஆகியோர் வழங்கினர்.
கடலூர் துறைமுகம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகர துணை செயலாளர்கள் பழனிவேல், சீனுவாசன், மகளிர் அணி செயலாளர் தேவி ஆகியோர் செய்திருந்தனர். கங்கணாங்குப்பம் அருகே உள்ள தாமரைக்குளத்தில் ஹெல்ப் ஏஜ் இந்தியா முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, இளைஞரணி செயலாளர் பிரபாகரன், விவசாய அணி செயலாளர் ரஜினிரவி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவந்திபுரம் அருகே உள்ள சிவசக்தி மனவளர்ச்சி குன்றியோர் மாணவ-மாணவிகளுக்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சுதாகர் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகர ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வாழப்பட்டு காது கேளாதோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் நகர செயலாளர் தட்சிணாமூர்த்தி, இணை செயலாளர் பாபு என்கிற முருகன், துணை செயலாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர் அருள்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி ஒன்றியம் விசூர், காடாம்புலியூர், வேகாக்கொல்லை, வீரபெருமாநல்லூர், பூங்குணம், முத்தாண்டிக்குப்பம் ஆகிய இடங்களில் அன்னதானம், ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர் ரஜினி சீனு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணாகிராமம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.ராஜேந்திரன் தலைமையில் தெற்கு சாத்திப்பட்டு, மேல்பட்டாம்பாக்கம், கண்டரக்கோட்டை, பூண்டி ஆகிய இடங்களில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. புதுப்பேட்டையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் இணை செயலாளர் சக்கரவர்த்தி, புதுப்பேட்டை செல்வா வடிவேல், குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் சுரேஷ், நகர நிர்வாகிகள் திருமால், சரண், சரவணன், ஆறுமுகம், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விருத்தாசலம் ஒன்றியத்தில் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மேலும் தொட்டி, மணவாளநல்லூர், மங்கலம்பேட்டை ஆகிய கிராமங்களில் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், இணை செயலாளர் ரஜினிவேலு, துணை செயலாளர்கள் பாபு, ரஜினிசவுந்தர் கலந்து கொண்டனர். நல்லூர் ஒன்றியத்தில் பெண்ணாடம் நகரம் அம்பேத்கர் நகர் அரசு பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் ரஜினிரவி, பேரூராட்சி செயலாளர் காசிநாதன், ஒன்றிய இணை செயலாளர் செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story