நீர்மூழ்கி கப்பலில் சிக்கியோரை மீட்கும் அதிநவீன வாகனம் கடற்படையில் சேர்க்கப்பட்டது


நீர்மூழ்கி கப்பலில் சிக்கியோரை மீட்கும் அதிநவீன வாகனம் கடற்படையில் சேர்க்கப்பட்டது
x
தினத்தந்தி 13 Dec 2018 5:47 AM IST (Updated: 13 Dec 2018 5:47 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கடற்படையில் முதன் முறையாக டி.எஸ்.ஆர்.வி. எனப்படும் அதிநவீன ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்பு வாகனம் சேர்க்கப்பட்டு உள்ளது.

மும்பை,

நடுக்கடலில் செயல் இழந்து முடங்கி கிடக்கும் நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஒரே சமயத்தில் 14 பேரை இந்த வாகனம் துரிதமாக மீட்கும் திறன் கொண்டது. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நேற்று இந்த நீர்மூழ்கி மீட்பு வாகனம் மும்பை கடற்படையில் சேர்க்கப்பட்டது. இது, இந்திய கடற்படைக்கு கிடைத்து உள்ள வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

மும்பையில் முதலாவது நீர்மூழ்கி மீட்பு வாகனம் சேர்க்கப்பட்டு உள்ள நிலையில் 2-வது வாகனம் அடுத்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் சேர்க்கப்பட உள்ளது.

Next Story