திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில்: ரெயில்வே மேம்பால பணி ஓராண்டுக்குள் முடிக்கப்படும் - கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தகவல்


திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில்: ரெயில்வே மேம்பால பணி ஓராண்டுக்குள் முடிக்கப்படும் - கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2018 10:00 PM GMT (Updated: 13 Dec 2018 7:03 PM GMT)

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பால பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் வழியாக பழனி, கரூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் 3 ரெயில் பாதைகள் செல்கின்றன. இந்த 3 பாதைகளுக்கு மேலாக ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. எனினும், இதுவரை பணிகள் நிறைவுபெறவில்லை. மேலும் ரெயில்வே மேம்பால பணிகளுக்கு நிலம் வழங்கியவர் களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

இதுதவிர மேம்பால பணிகளால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மேம்பாலம் கட்ட நிலம் வழங்கியவர்கள் மற்றும் பொதுமக்கள், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சுரங்கப்பாதைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என்று, கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் ரெயில்வே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, 21 நலச்சங்கத்தினர் கலந்து கொண்ட னர். இந்த பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறுகையில், மேம்பால பணிகளை ஓராண்டுக் குள் முடிக் கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். அதுவரை பழனி பாதையில் உள்ள ரெயில்வே கேட் திறப்பதாக கூறினார். மேலும் மேம்பாலம் கட்டுவதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக் டர் உறுதிஅளித்தார். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது, என்றார். 

Next Story