21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் போராட்டம்
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி,
ஆலங்குடியில் கிராம நிர்வாக அதிகாரிகள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குடி வட்டஞ்கச்சேரி திடலில் மக்களை தேடி என்னும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் பாண்டியன், பொருளாளர் வசந்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குடி வட்ட தலைவர் புஷ்பராஜ் வரவேற்று பேசினார். மாநில அமைப்பு செயலாளர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் சாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி, வாரிசு, இறப்பு, விதவை சான்றுகள் போன்ற 21 வகையான சான்றுகள் இணையதள மூலம் 5 ஆண்டு காலமாக கிராம நிர்வாக அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான கணிணி வசதி, ஆன்லைன் வசதி செய்து தரப்படவில்லை.
கழிவறை வசதி
கிராம நிர்வாக அதிகாரிகள் தங்கள் சொந்த செலவிலேயே சான்றுகளை பரிந்துரை செய்து வருகின்றனர். இ அடங்கலும் இணைய தளத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதற்கான கணினி இணையதள வசதி செய்து தரப்பட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கழிவறை வசதி செய்து தரப்பட வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்தால் அவர்களின் பணி மேலும் சிறப்பாக இருக்கும், ஆகவே மாவட்ட மாறுதல்கள் செய்து தரப்பட வேண்டும். கிராம நிர்வாக அதிகாரியின் ஒப்புதல் பெற்ற பின்னரே உட்பிரிவு பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கைகள் மேற் கொள்ள பட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காலவறையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story