கரூரில் எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு


கரூரில் எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 14 Dec 2018 4:00 AM IST (Updated: 14 Dec 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

எச்.ராஜாவுக்கு எதிராக கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் நேற்று மதியம் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே ஒன்று கூடினர்.

கரூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் பற்றி அவதூறு கருத்தினை வெளியிட்டதாக கூறி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் நேற்று மதியம் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் எச்.ராஜாவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடியே அவரது உருவபொம்மையை தீயிட்டு எரித்தனர். அப்போது திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோஷமிட்டனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இளங்கோ, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story