ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பெரியார் பஸ்நிலைய கடைகளை 18 மாதத்தில் கட்டி முடிக்க வேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு
பெரியார் பஸ்நிலைய கடைகளை 18 மாதத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை பாரதியார் வணிக வளாக வியாபாரிகள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை பெரியார் நிலையம் மற்றும் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் 40 ஆண்டுகளாக 444 கடைகள் செயல்படுகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மதுரை பெரியார் பஸ் நிலையம், காம்ப்ளக்ஸ் பஸ் நிலையம் ஆகியவற்றை நவீன பஸ்நிலையமாக மாற்றுவதற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் உரிய அவகாசம் அளிக்கப்படாமல் கடைகளை 15 நாட்களில் காலி செய்யுமாறு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனிநீதிபதி, மனுதாரர் சங்க கடைகளுக்கு மாநகராட்சி வழங்கிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க பரிந்துரைத்தார்.
அதன்பேரில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மதுரை பெரியார் பஸ்நிலைய பகுதியில் கடை வைத்துள்ளவர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் கடைகளை காலி செய்கிறோம் என்று வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் தனித்தனியாக உத்தரவாதம் எழுதி தர வேண்டும். உத்தரவாதம் அளித்தவர்கள் மட்டும் ஜனவரி மாதம் 17-ந்தேதி வரை கடைகளை தொடர்ந்து நடத்தலாம். அதன் பின்னர் காலி செய்துவிட வேண்டும். உத்தரவாதம் கொடுக்காதவர்கள் இந்த மாதம்(டிசம்பர்) 31-ந்தேதியுடன் கடையை காலி செய்ய வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பெரியார் பஸ்நிலையத்தில் கடைகளை 18 மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும். அதுவரை காலி இடத்தில் கடைகள் நடத்த மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும். புதிய கட்டிடம் கட்டிய உடன், இங்குள்ள கடைக்காரர்களுக்கு முதலில் கடைகளை ஒதுக்க வேண்டும். கூடுதல் கடைகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை பொது ஏலத்தில் விடலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

Related Tags :
Next Story