லட்சக்கணக்கானோருக்கு வேலை அளிக்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் - நல்லக்கண்ணு வலியுறுத்தல்
லட்சக்கணக்கானோ ருக்கு வேலை அளிக்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என மதுரையில் அளித்த பேட்டியில் நல்லக்கண்ணு கூறினார்.
மதுரை,
மதுரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது நல்லக்கண்ணு கூறியதாவது-
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் பா.ஜ.க. பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பெரு முதலாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு வந்தது. விவசாயிகள், ஏழை மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாகவே 5 மாநில தேர்தலில் மக்கள், தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். 2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் முடிவுகள் இருக்கின் றன. நாடாளுமன்ற தேர்தலி லும் பா.ஜ.க.வுக்கு தோல்வி காத்திருக்கிறது.
தமிழகத்தில் கஜா புயல் பாதித்த தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண் டும். 4 மாவட்டங்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்தா லும் அவை மக்களுக்கு சரிவர சென்றடையவில்லை. அறிவிக்கப்பட்ட நிவாரணமும் குறைவாக உள்ளது.
புயலில் சாய்ந்த மரம் ஒன்றுக்கு ரூ.1,100 மட்டும் நிவாரணமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தொகை எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அறிவிக் கப்பட்ட தொகை. எனவே தற்போதைய காலத் துக்கு ஏற்றவாறு சாகுபடி செய்யப் பட்டுள்ள பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், சாய்ந்த மரம் ஒவ்வொன் றுக்கும் ரூ.50 ஆயிரம் என இழப்பீடு களை உயர்த்தி வழங்க வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களின் மறுவாழ் வுக்கு உத்தர வாதத்தை யும் அரசு அளிக்க வேண்டும்.
மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணைகட்டி தமிழகத்துக்கு வரும் தண்ணீரை கர்நாடகம் தடுக்க முயற்சிக்கிறது. இதற்கு மத்திய அரசு துணை நிற்கிறது. மேகதாது பகுதியில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட் டோம். மீறினால் போராட் டம் நடத்தப் படும்.
தமிழகத் தில் சிவ காசியில் லட்சக் கணக்கான தொழி லாளர் களுக்கு பட்டாசு தொழில் வேலை அளித்து வருகிறது. தமிழக அரசு பசுமை பட்டாசு உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் பசுமை பட்டாசு என்றால் என்ன? என்பதற்கு இதுவரை விளக்கம் அளிக்க வில்லை. எனவே பட்டாசு தொழிலை பாதுகாக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
5 மாநில தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வியை பா.ஜ.க. ஒப்புக்கொள்ள வேண்டும். தோல்விக்கு காரணங்கள் கற்பிக்கக்கூடாது. தங்களுக்கு வாக்கு சதவீதம் கூடியிருப்பதாக மழுப்புகின்ற னர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றுதான் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசும், மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது. தமிழ கத்தில் தி.மு.க. கூட்டணியில் தான் இந்திய கம்யூனிஸ்டு உள்ளது. தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிப்பது பலிக் காது.
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வரம்பு மீறி பேசி வருகிறார். அவரை அக்கட்சி யின் தலைமை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் அவரை கட்டுப்படுத் தும் சூழல் ஏற்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விவசாயிகள் சங்கங்களின் சார்பில் வருகிற 18-ந்தேதி, புயல் பாதித்த 4 மாவட்டங் களில் ஏராளமான இடங்களில் உண்ணாவிரதம் நடத்தப் படும்.

Related Tags :
Next Story