மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து : போக்குவரத்து போலீசார் திட்டம்


மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து : போக்குவரத்து போலீசார் திட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2018 5:12 AM IST (Updated: 14 Dec 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக 3 மாதம் ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மும்பை, 

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிகளவு சாலை விபத்துகள் நடக்கின்றன. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சிக்கியவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து உள்ளது. எனினும் டிரைவர்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தடுக்க போக்குவரத்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

இதன்படி இனிமேல் மது குடித்துவிட்டு சிக்கும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக 3 மாதம் ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகளின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மும்பை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அமிதேஷ் குமார் கூறுகையில், இந்த மாத இறுதிக்குள் இந்த நடவடிக்கை அமலுக்கு வரலாம், என்றார்.

இதேபோல அதிக வேகம், சிக்னலை மீறி செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுதல், அதிக பாரம் ஏற்றுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Next Story