குடும்பத்தகராறு விஷம் குடித்து விவசாயி தற்கொலை மனைவிக்கு தீவிர சிகிச்சை


குடும்பத்தகராறு விஷம் குடித்து விவசாயி தற்கொலை மனைவிக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 15 Dec 2018 3:30 AM IST (Updated: 15 Dec 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தகராறு காரணமாக விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 55). விவசாயி. இவர் உறவினர்களோடு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வயலுக்கு சென்ற ராஜகோபால் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அறிந்த அவரது மனைவி ரமணியும் (48), கணவரின் செயலால் பதறிப்போய் பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கணவன், மனைவி இருவரையும் உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ரமணி மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story