திருச்சியில் எச்.ராஜா உருவபொம்மை எரிக்க முயற்சி போலீசாருடன் தள்ளு முள்ளு; விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 23 பேர் கைது


திருச்சியில் எச்.ராஜா உருவபொம்மை எரிக்க முயற்சி போலீசாருடன் தள்ளு முள்ளு; விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 23 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2018 4:30 AM IST (Updated: 15 Dec 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் எச்.ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி அவரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகர் மாவட்ட துணை செயலாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென எச். ராஜா உருவ பொம்மையை கொண்டு வந்து அதற்கு தீயிட்டு கொளுத்த முயன்றனர். அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த கண்டோன்மெண்ட் போலீசார் அதனை எரிக்க விடாமல் அவர்களது கையில் இருந்து பிடுங்கினார்கள். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி தள்ளு முள்ளு ஏற்பட்டது. உருவ பொம்மையை எரிக்க விடாமல் போலீசார் தடுத்து விட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் நீலவாணன், தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அரசு, அமைப்பாளர் பழனியப்பன் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story