மணப்பாறையில் எச்.ராஜா உருவபொம்மையை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம்
மணப்பாறையில் எச்.ராஜா உருவபொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா இழிவாக பேசியதாகவும், அவரை உடனே கைது செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் செல்வராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் எச்.ராஜாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியபடி கையில் எச்.ராஜாவின் உருவபொம்மையை எடுத்துக் கொண்டு பஸ்நிலையம் வந்தனர். பின்னர் அவர்கள் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்.
அப்போது எச்.ராஜாவை உடனடியாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறி தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். சிறிது நேரத்தில் பொம்மை எரிந்து முடிந்தது. பின்னர் கட்சி நிர்வாகிகள் கலைந்து செல்ல சென்ற போது சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரூபினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை சிறிது நேரத்தில் விடுவித்தனர்.
இந்த போராட்டத்தில் மாவட்டப் பொருளாளர் மதனகோபால், மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜஹான், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சக்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story