திருப்புவனம் ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
திருப்புவனம் ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் முத்துக்குமார் வரவேற்றார். ஒன்றிய பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஏற்கனவே நடைபெற்று கொண்டிருக்கும் திட்டப்பணிகளையும், புதிதாக நடைபெற உள்ள பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் திருப்புவனம் ஒன்றியம் கானூர் கிராமத்தை சேர்ந்த தாட்சாயினி என்ற பெண்ணிற்கு இருசக்கர வாகன மானியமாக ரூ.25 ஆயிரம் காசோலையை அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சத்துணவு சமையல் செய்யும் இடம், சத்துணவு வழங்கும் இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். பின்பு சுகாதாரம் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பழுது ஏற்பட்டுள்ளதால், அதனை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கணேசன், நகர் செயலாளர் நாகரத்தினம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒன்றிய மேலாளர் சுகுமார் தலைமையில் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.