ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் பொய்கள் அம்பலமாகி விட்டது : முதல்-மந்திரி பேட்டி
ரபேல் போர் விமான ஊழல் புகாரில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் ராகுல் காந்தியின் பொய்கள் அம்பலமாகி விட்டது என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை,
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடந்ததிற்கான முகாந்திரம் இல்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.
இது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்துகொண்டு சர்வதேச சமூகம் முன் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டினார். ஆனால் உண்மை சூரியன் போன்றது. சுப்ரீம் கோர்ட்டு எந்த விசாரணையும் இன்றி ரபேல் விமான வழக்கை தள்ளுபடி செய்ததன் மூலம் எங்கள் நிலைப்பாடு நிரூபணமாகியுள்ளது.
ராகுல் காந்தி தேர்தலுக்காக நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி உள்ளார்.
அவரின் பொய்கள் தற்போது அம்பலமாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ததற்காகவும், நம் நாட்டின் பெருமையை சர்வதேச சமூகம் முன் சீர்குலைத்ததற்காகவும் நாட்டு மக்கள் முன்பும், பிரதமர் மோடியிடமும் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கோரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story