‘வக்கீல்களின் வாதங்கள் நல்ல தீர்ப்புக்கு வழிவகுக்கும்’ ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் பேச்சு


‘வக்கீல்களின் வாதங்கள் நல்ல தீர்ப்புக்கு வழிவகுக்கும்’ ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் பேச்சு
x
தினத்தந்தி 16 Dec 2018 3:00 AM IST (Updated: 15 Dec 2018 11:59 PM IST)
t-max-icont-min-icon

‘வக்கீல்களின் வாதங்கள் நல்ல தீர்ப்புக்கு வழிவகுக்கும்‘ என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் கூறினார்.

நெல்லை, 

நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் நெல்லை கோர்ட்டில் மூத்த வக்கீல் கருப்பையா நினைவு சொற்பொழிவு நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமை தாங்கினார். வக்கீல் சங்க தலைவர் சிவசூரிய நாராயணன் வரவேற்று பேசினார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர், ‘இந்திய முன்னோடி சட்டம்‘ என்ற தலைப்பில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் பல தீர்ப்புகள் கூறப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தீர்ப்புகளின் நுணுக்கங்களை வக்கீல்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நீதிபதிகளும் அதிக அளவு சட்ட புத்தகங்களை படித்து தான் தீர்ப்பு கூறுகிறார்கள்.

இந்திய நாட்டில் கூறப்பட்ட பல வழக்குகளின் தீர்ப்புகள் வெளிநாடுகளிலும் முன் உதாரணமாக எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது. சட்ட புத்தகங்கள் அதிக அளவு படித்தால் தான் அதிகமாக விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். வக்கீல்கள் அதிக அளவு புத்தகங்களை படித்து தங்களது வாத திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். உங்களின் வாதங்கள் நல்ல தீர்ப்புக்கு வழிவகுக்கும்

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, வக்கீல்கள் ராஜேந்திரன், செல்வகுமார், அரசு வக்கீல் அபுதாகீர், முன்னாள் கூடுதல் அரசு வக்கீல் கதிரவன் ஆகியோர் பேசினார்கள். முடிவில் வக்கீல் சங்க செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story