ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று தரைப்பாலத்தில் போக்குவரத்து ரத்து தற்காலிக சாலையில் வாகனங்கள் இயக்கம்


ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று தரைப்பாலத்தில் போக்குவரத்து ரத்து தற்காலிக சாலையில் வாகனங்கள் இயக்கம்
x
தினத்தந்தி 16 Dec 2018 4:30 AM IST (Updated: 16 Dec 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று தரைப்பாலத்தில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது தற்காலிக சாலையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. மழை காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் 1937-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் மீது 450 மீட்டர் தூரத்துக்கு தரைப்பாலம் அமைத்தனர்.

இந்த தரைப்பாலம் வழியாகதான் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடந்து வந்தது. கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பலத்த மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50 நாட்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு பெரியபாளையம், வெங்கல், தாமரைபாக்கம் கூட்டுச் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

இதையடுத்து ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊத்துக்கோட்டை பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க அரசு ரூ.28 கோடி ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு மேம்பாலம் அமைக் கும் பணிகள் தொடங் கப்பட்டன. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது தரைப்பாலத்தின் வழியாக இயங்கி வரும் வாகன போக்குவரத்துக்காக தரைப்பாலத்தின் கிழக்கு திசையில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலையில் வாகன போக்குவரத்து தொடங்கி உள்ளது.

Next Story