மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கி 8 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு + "||" + 8 pound chain flickers attacking woman

பெண்ணை தாக்கி 8 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு

பெண்ணை தாக்கி 8 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு
பூம்புகார் அருகே பெண்ணை தாக்கி 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவெண்காடு,

நாகை மாவட்டம், பூம்புகார் அருகே வானகிரி மீனவர் காலனியை சேர்ந்த ரெங்கசாமி. இவருடைய மனைவி ராமாயி (வயது 54). இவர், நேற்று அதிகாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், தான் மறைத்து வைத்து இருந்த இரும்பு கம்பியால் ராமாயியை தாக்கிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்து சென்றார்.


வலைவீச்சு

இதில் காயம் அடைந்த ராமாயியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கி 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் சங்கிலி பறிப்பு புத்தகம் விற்பது போல் வந்த மர்ம நபர் கைவரிசை
திருச்சி உறையூரில் புத்தகம் விற்பது போல் வந்து மிளகாய்பொடியை தூவி பெண்ணிடம் மர்ம நபர் சங்கிலியை பறித்து சென்றார்.
2. தலைமை ஆசிரியையை கத்தியால் குத்தி நகை பறிப்பு வகுப்பறைக்குள் புகுந்து மர்ம நபர்கள் துணிகரம்
தேன்கனிக்கோட்டை அருகே பட்டப்பகலில் வகுப்பறைக்குள் புகுந்து தலைமை ஆசிரியையை கத்தியால் குத்தி மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.
3. வங்கி அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மார்த்தாண்டம் அருகே தனியார் வங்கி அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் பறித்த மர்மநபர்கள் தப்பி விட்டனர்.
4. தில்லைநகரில் துணிகர சம்பவம்: கோவிலுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
திருச்சி தில்லைநகரில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் பஸ் ஏற முயன்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.