கும்மிடிப்பூண்டி அருகே மருத்துவ ஊழியர்கள் மீது சிகிச்சைக்கு வந்த வாலிபர்கள் தாக்குதல்
கும்மிடிப்பூண்டி அருகே மருத்துவ ஊழியர்கள் மீது சிகிச்சைக்கு வந்த வாலிபர்கள் தாக்குதல் நடத்தினர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வட்டார மருத்துவ அலுவலராகவும், பொறுப்பு மருத்துவ அலுவலராகவும் டாக்டர் கோவிந்தராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் நேற்று பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
இதனையடுத்து அந்த நபர்கள், மருத்துவமனையில் இருந்த பொருட்கள், ஜன்னல் மற்றும் கதவுகளில் இருந்த கண்ணாடிகளை உடைத்து எறிந்தனர். அப்போது செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் தங்களது பாதுகாப்பிற்காக மருத்துவமனையின் கதவை தாழிட்டு உள்ளிருந்த போதும் உடைந்த கண்ணாடிகளையும், பொருட்களையும் அவர்கள் ஆவேசத்துடன் தூக்கி எறிந்து மருத்துவ ஊழியர்களை தாக்கி உள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த கிராம பொதுமக்கள் அவர்களிடம் இருந்து செவிலியர்களையும், மருத்துவமனை ஊழியர்களையும், நோயாளிகளையும் காப்பாற்றினர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது அருந்திய நிலையில் நேற்று முன்தினம் சுமார் 20 வயது மதிக்கத்தக்க 2 பேர் கால் மற்றும் கைகளில் சிறிய சிராய்ப்பு காயங்களுடன் ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்து விட்டு அமர்ந்திருக்க சொன்ன செவிலியர்கள், அதே சமயத்தில் காய்ச்சலுக்காக வந்திருந்த மற்றொருவரை பார்த்துக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த மேற்கண்ட 2 நபர்களும், செவிலியர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க வந்தனர். அவர்களை இரவு காவலாளி, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த கர்ப்பிணி பெண்கள் உள்பட சக நோயாளிகளை தடுக்க முற்பட்டனர்.
இதனையடுத்து அந்த நபர்கள், மருத்துவமனையில் இருந்த பொருட்கள், ஜன்னல் மற்றும் கதவுகளில் இருந்த கண்ணாடிகளை உடைத்து எறிந்தனர். அப்போது செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் தங்களது பாதுகாப்பிற்காக மருத்துவமனையின் கதவை தாழிட்டு உள்ளிருந்த போதும் உடைந்த கண்ணாடிகளையும், பொருட்களையும் அவர்கள் ஆவேசத்துடன் தூக்கி எறிந்து மருத்துவ ஊழியர்களை தாக்கி உள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த கிராம பொதுமக்கள் அவர்களிடம் இருந்து செவிலியர்களையும், மருத்துவமனை ஊழியர்களையும், நோயாளிகளையும் காப்பாற்றினர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story