கூடலூர் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள்


கூடலூர் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள்
x
தினத்தந்தி 16 Dec 2018 4:00 AM IST (Updated: 16 Dec 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

கூடலூர்,

கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்கு குப்பைகள், கழிவுப்பொருட்கள், மற்றும் தெருக்களில் இருந்து அள்ளப்படும் சாக்கடை கழிவுகள், இறைச்சிக்கழிவு, காய்கறி மார்கெட்டுகளில் குவியும் அழுகிய காய்கறிகள் அனைத்தும் துப்புரவு பணியாளர்கள் மூலம் அள்ளப்பட்டு நகரின் மத்தியில் உள்ள பெத்துக்குளம் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்தநிலையில் தற்போது குப்பைகளை சேகரிக்க நகராட்சி சார்பில் 10 மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளது. இவை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.


Next Story