அரசு மருத்துவமனையில் நோயாளி கையில் செலுத்தப்பட்ட ஊசியை பறித்த டாக்டர் இடமாற்றம்
குளித்தலை அரசு மருத்துவமனையில் நோயாளி கையில் செலுத்தப்பட்டிருந்த ஊசியை பறித்த டாக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை சங்கிலிராயன்கோவில் தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய உறவினர்கள் அவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் மனோஜ்குமாருக்கு சிகிச்சை அளித்து, குளுக்கோஸ் போட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு வந்த அரசு டாக்டர் பாண்டியன், மனோஜ்குமாரின் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்டிருந்த ஊசியை பறித்துவிட்டு, தவறி கீழே விழுந்தார். இதனால் மனோஜ்குமாரின் கையில் இருந்து ரத்தம் வெளியேறியது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த மனோஜ்குமாரின் உறவினர்கள் அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மனோஜ் குமாரை, உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து டாக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி, உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணை நடந்து வருவதாகவும், மருத்துவமனை வட்டாரத்தினர் கூறினர்.
இந்நிலையில் டாக்டர் பாண்டியனை, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து கரூர் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story