முன்னாள் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணாடம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
முன்னாள் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணாடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள தி.அகரம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 1996-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் பட்டா வழங்குவதற்காக பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்த போது, அரசியல் கட்சியினரின் தலையீட்டால் பட்டா வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதன் பேரில் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டு, கடந்த மாதம் 22-ந் தேதி வேப்பூர் அருகே மேல்ஆதனூரில் நடந்த மனுநீதி முகாமில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த் கலந்து கொண்டு 10 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார். மீதமுள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
இதற்கிடையே திட்டக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தமிழழகன், தனது ஆதரவாளர்கள் 50 பேருக்கு தி.அகரத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க விடாமல் தடுத்து விடுவேன் என்றும் கூறியதாக தெரிகிறது. மேலும் கலெக்டரிடம் பொய் புகார் கூறி வீட்டுமனை பட்டா வழங்குவதை தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டுமனை பட்டா கிடைப்பதற்கு முயற்சித்து வந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு தமிழழகன் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழழகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று பெண்ணாடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், இது சம்பந்தமாக புகார் கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் புகார் மனு கொடுத்து விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story