தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை; கலெக்டர் அறிவிப்பு


தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை; கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 6:21 AM IST (Updated: 16 Dec 2018 6:21 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

 தமிழகத்திலுள்ள கடைகள், தொழிலகங்கள், உணவகங்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் நிறுவனத்தின் பெயர் கட்டாயமாக முதலில் தமிழில் எழுதவேண்டும் என்றும் தேவைப்பட்டால் அதற்கு கீழே பிறமொழிகளில் இடம் பெறலாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஆணையிட்டுள்ளபடி, மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவகங்கள், தொழிலகங்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் அரசு வகுத்தளித்த விதிமுறைகளின்படி தமிழில் வைத்திடல் வேண்டும்.

வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் உள்ளனவா என்பதை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி பெயர்ப் பலகைகள் வைத்திருந்தால் அந்த நிறுவனங்கள் அபராதத் தொகை செலுத்த நேரிடும்.

எனவே, வணிகப் பெருமக்கள் தங்கள் நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் அமைத்து ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story