உத்தமபாளையம், கோர்ட்டு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் கைது


உத்தமபாளையம், கோர்ட்டு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2018 3:30 AM IST (Updated: 16 Dec 2018 10:31 PM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

உப்புக்கோட்டை,

போடி சவுடம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்(வயது 37). இவர் வீரபாண்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் கட்டி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த 38 வயது பெண் உத்தமபாளையம் சப்-கோர்ட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே இவர் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் அருண், அந்த பெண்ணை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அருண், அவரை அசிங்கமாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருணை கைது செய்தார்.

Next Story