ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு விளக்க கூட்டம்


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு விளக்க கூட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2018 10:30 PM GMT (Updated: 16 Dec 2018 8:10 PM GMT)

ஜாக்டோ- ஜியோ போராட்டம் சார்பாக நீதிமன்ற நிகழ்வுகள் குறித்த விளக்க கூட்டம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நேற்று நடந்தது.

பெரம்பலூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. கடந்த 4-ந் தேதி முதல் நடைபெற இருந்த வேலை நிறுத்த போராட்டம் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் யோசனையை ஏற்று போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ- ஜியோ போராட்டம் சார்பாக நீதிமன்ற நிகழ்வுகள் குறித்த விளக்க கூட்டம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோவின் ஒருங்கிணைப்பாளரான தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரிஅனந்தன் வரவேற்றார். கூட்டத்தில் ஜாக்டோ- ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டம் தொடர்பாக நீதிமன்ற நிகழ்வுகளை எடுத்துரைத்தனர். இதில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பில் உள்ள அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story