கூடலூரில், கலப்பட தேயிலைத்தூளை கண்டறிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
கூடலூரில் கலப்பட தேயிலைத்தூளை கண்டறிவது குறித்து பொதுமக்களுக்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கூடலூர்,
கூடலூர் தேயிலை வாரியம் மற்றும் நீலகிரி, வயநாடு தேயிலை அசோசியேஷன்ஸ் ஆகியவை சார்பில் தேசிய தேயிலை தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடைபெற்றது.
இதற்கு கூடலூர் தேயிலை வாரிய துணை இயக்குநர் ரமேஷ் தலைமை தாங்கினார். பங்கு குரு ரெனி ஜோர்ஜ் முன்னிலை வகித்தார். நீலகிரி, வயநாடு தேயிலை அசோசியேஷன்ஸ் தலைவர் ஜோசப் வரவேற்றார். தேயிலை வாரிய உறுப்பினர் மனோஜ் குமார் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அம்மு, நாராயணி, காலன், சஜீவ், லட்சுமி, சரண்ராஜ், எட்வின் எலியாஸ், பாத்திமா உள்ளிட்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூடலூர் தொகுதி வியாபாரிகள் சங்க தலைவர் தோமஸ், தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சளிவயல் சாஜி உள்பட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நீலகிரி, வயநாடு தேயிலை அசோசியேஷன்ஸ் செயலாளர் மனோஜ் நன்றி கூறினார்.
இதனை தொடர்ந்து தேயிலைத்தூள் தயாரிப்பு குறித்து தெரிந்துகொள்ள கூடலூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மாணவ- மாணவிகளை அழைத்து சென்று, தேயிலை வாரிய அலுவலர்கள் செயல் முறை விளக்கம் அளித்தனர்.
பின்னர் கலப்பட தேயிலைத்தூளை அடையாளம் கண்டறிவது குறித்து கூடலூர் புதிய பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் மாணவ- மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கலப்பட தேயிலை தூளை கண்டறிவது குறித்து மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் தேயிலை வாரிய அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story