மாவட்ட செய்திகள்

நடிகர் வினோத் கன்னாவின் முதல் மனைவி மரணம் + "||" + Actor Vinod Kanna The first wife dies

நடிகர் வினோத் கன்னாவின் முதல் மனைவி மரணம்

நடிகர் வினோத் கன்னாவின் முதல் மனைவி மரணம்
இந்தி நடிகர் வினோத் கன்னாவின் முதல் மனைவி மரணம் அடைந்தார்.
மும்பை,

மறைந்த இந்தி நடிகர் வினோத் கன்னாவின் முதல் மனைவி கீதாஞ்சலி (வயது70). இவர் மராட்டிய மாநிலம் ராய்காட் மான்ட்வா பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மூச்சுவிடுவதற்கே சிரமப்பட்டார்.


மும்பையில் இருந்து பண்ணை வீட்டுக்கு வந்திருந்த அவரது மகனும், நடிகருமான அக்சய் கன்னா உடனடியாக தாயை சோன்டி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சைக்கு பின்னா் அவர் மீண்டும் பண்ணை வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அக்சய் கன்னா தாயை ஓய்வு எடுக்க சொல்லி விட்டு வெளியில் சென்றார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த அக்சய் கன்னா தாயை பார்ப்பதற்காக அறைக்கு சென்றார். அப்போது, கீதாஞ்சலி படுக்கையில் பேச்சு, மூச்சு இன்றி கிடந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கீதாஞ்சலி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதன்பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று கீதாஞ்சலியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து மும்பை அலிபாக்கில் நேற்று மதியம் அவரது இறுதிச்சடங்குகள் நடந்தன.

நடிகர் வினோத் கன்னா கீதாஞ்சலியை கடந்த 1985-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின்னர் 1990-ம் ஆண்டு கவிதா என்பவரை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் ஜானி டெப் முகத்தில் குத்தி கையை முறித்த மனைவி கோர்ட்டில் தகவல்
‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜானிடெப்.
2. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தலா?
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் 5-ந் தேதியில் இருந்து மாயமாகிவிட்டதாக அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. தனது மகனின் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற நடிகர் அம்பரீசின் விருப்பம் நிறைவேறாமல் போய்விட்டது மனைவி சுமலதா கண்ணீர் மல்க பேச்சு
தனது மகனின் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற நடிகர் அம்பரீசின் விருப்பம் நிறைவேறாமல் போய்விட்டது என்று அவரது மனைவி சுமலதா கண்ணீர் மல்க உருக்கமாக கூறினார்.