கலினாவில் விபத்தில் சிக்கிய மாடி பஸ் மீது ஸ்கூட்டர், ஆட்டோ மோதல் 3 பேர் படுகாயம்
கலினாவில் மரத்தில் மோதிய மாடி பஸ் மீது ஸ்கூட்டர், ஆட்டோ அடுத்தடுத்து மோதின. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை,
மும்பை சாந்தாகுருசில் இருந்து குர்லா நோக்கி நேற்று முன்தினம் பெஸ்ட் மாடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந் தது. பஸ்சை டிரைவர் விஜய் தேவ்கர் என்பவர் ஓட்டினார்.
அந்த பஸ் கலினாமிலிட்டரி கேம்ப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து சாலை யோரத்தில் நிற்கும் பெரிய மரத்தின் மீது மோதியது.
அந்த நேரத்தில் பக்கத்து சாலையில் வந்து கொண்டி ருந்த ஒரு ஆட்டோவும், ஸ்கூட்டரும் சாலையின் குறுக்கே நின்ற அந்த பஸ் மீது அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின.
இதில், ஸ்கூட்டரை ஓட்டிவந்த ஜான் செகுவாரியா (வயது58), பின்னால் அமர்ந்து இருந்த மணிலால் பன்வேலி (26), ஆட்டோ டிரைவர் அப்லா சுவாமி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதிர்ஷ் டவசமாக மரத்தில் மோதிய பஸ்சில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர் விஜய் தேவ்கரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story