‘பெய்ட்டி’ புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்கவேண்டும் - நாராயணசாமி உத்தரவு


‘பெய்ட்டி’ புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்கவேண்டும் - நாராயணசாமி உத்தரவு
x
தினத்தந்தி 17 Dec 2018 7:15 AM IST (Updated: 17 Dec 2018 7:13 AM IST)
t-max-icont-min-icon

‘பெய்ட்டி’ புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘பெய்ட்டி’ புயல் காரணமாக ஆந்திர மாநில பகுதியில் உள்ள புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியமும் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஏனாம் மண்டல நிர்வாகியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் அதிகாரியிடம் கூறுகையில், ‘புயல் கரையை கடக்கும் வரை தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண மையங்களில் பாதுகாப்பாக இருக்கவைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை, மின்துறை, தீயணைப்பு, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், மின்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புயலை எதிர்கொள்ள அனைத்து வகை யிலும் தயாராக இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Next Story