திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா பந்தக்கால் மூகூர்த்தம்
திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது. தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம்(ஜனவரி) 21–ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்கி 25–ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு சபை தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் தலைமை தாங்குகிறார். கர்நாடக இசை கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன் விழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில் சபை அறங்காவலர்கள் குழுத்தலைவர் ஜி.கே.வாசன், தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
தியாகராஜர் முக்தியடைந்த பகுளபஞ்சமி தினமான ஜனவரி 25–ந் தேதி(வெள்ளிக்கிழமை) தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறுது. விழாவில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் சங்கீத வித்வான்கள் கலந்து கொண்டு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. நேற்று திருவையாறில் 172–வது தியாகராஜர் ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் அறங்காவலர்கள் சுரேஷ்மூப்பனார், சந்திரசேகர மூப்பனார், டெக்கான் மூர்த்தி, எம்.ஆர்.பஞ்சநதம், உதவிசெயலாளர்கள் கோவிந்தராஜன், ரவிச்சந்திரன் மற்றும் சபை நிர்வாகிகள் கலந்துகொண்டு பந்தக்கால் நட்டு வைத்தனர். இதில் சபை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை செயலாளர்கள் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜராவ், பொருளாளர் கணேஷ், அறங்காவலர்கள், உதவிச்செயலாளர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.

Related Tags :
Next Story