கோவில்பட்டியில் வீடுகளில் புகுந்து திருடிய வாலிபர் கைது 20 பவுன் நகை மீட்பு
கோவில்பட்டியில் வீடுகளில் புகுந்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 20 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்றவரிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது, அவர் ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை பகுதியைச் சேர்ந்த அன்புதாசன் மகன் மணி அய்யப்பன் (வயது 27) என்பதும், அவர் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து நகை திருடியதாக தெரிவித்தார்.
விசாரணையின்போது மேலும் அவர் கூறியதாவது:- நான், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி செண்பகவல்லி நகரைச் சேர்ந்த முருகேசனின் வீட்டில் புகுந்து 10 பவுன் நகையை திருடி சென்றேன்.
பின்னர் கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவைச் சேர்ந்த இனியன் மனைவி மீனாவிடம் (42) வீடுபுகுந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றேன்.
கோவில்பட்டி இ.பி.காலனியைச் சேர்ந்த செல்வராஜின் வீட்டில் புகுந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் டி.வி.யை திருடிச் சென்றதாக, தெரிவித்தார்.
அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.
பின்னர் அவரை போலீசார் நேற்று கோவில்பட்டி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story