ஸ்டெர்லைட் ஆலை திறக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு: மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் 30 பேர் கைது
சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ தலைமை தாங்கினார். இதில் தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து வக்கீல் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், “மக்களுக்கு தீங்கு செய்யும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரிய உத்தரவை ஏற்கவே முடியாது. இது தூத்துக்குடி மக்களின் நலன் சார்ந்த பிரச்சினை. மக்களின் உயிரோடு விளையாடும் அந்த நச்சு ஆலையை மீண்டும் செயல்பட அனுமதிக்கக்கூடாது” என்றார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story