திரு.வி.க. நகரில் நண்பர்கள் கீழே தள்ளியதில் போதை வாலிபர் சாவு 3 பேர் கைது


திரு.வி.க. நகரில் நண்பர்கள் கீழே தள்ளியதில் போதை வாலிபர் சாவு 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2018 3:45 AM IST (Updated: 18 Dec 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

திரு.வி.க. நகரில் நண்பர்கள் கீழே தள்ளியதில் மதுபோதையில் இருந்த வாலிபர் உயிரிழந்தார்.

திரு.வி.க. நகர்,

சென்னை திரு.வி.க. நகர், காமராஜ் நகர் 1-வது தெருவில் வசித்து வந்தவர் விக்னேஷ் (வயது 28). கட்டிட வேலை செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. திரு.வி.க. நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் அமானுல்லா (43). அதே பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

அதே கடையில் இவரது சித்தி மகன் முபாரக் (42) என்பவரும், ராஜ்குமார் (47) என்பவரும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் விக்னேசும் நண்பர்கள்.

கடந்த 13-ந் தேதி இரவு விக்னேஷ் மதுபோதையில் அமானுல்லாவின் கடைக்கு வந்தார். அங்கு அவர் வாந்தி எடுத்ததாக தெரிகிறது. இதனால் அவரை வீட்டுக்கு போகும்படி, கடையில் இருந்த அமானுல்லா, முபாரக், ராஜ்குமார் ஆகியோர் கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கீழே தள்ளினார்கள்

வாக்குவாதம் முற்றிய நிலையில் விக்னேசுக்கும், 3 பேருக் கும் இடையே கைகலப்பு உருவானது. அப்போது 3 பேரும் சேர்ந்து விக்னேஷை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. அவர் போதையில்தான் மயங்கி விழுந்துள்ளதாக அவர்கள் நினைத்து உள்ளனர். இதையடுத்து விக்னேசின் தம்பி ராஜேஷ் (23) என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராஜேஷ், கீழே விழுந்து கிடந்த விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுபற்றி ராஜேஷ் திரு.வி.க நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார்.

3 பேர் கைது

இதனையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றபட்டுள்ளது. விக்னேஷை கீழே தள்ளிய அமானுல்லா, முபாரக் மற்றும் ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

உயிரிழந்த விக்னேஷ் மீது ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், மற்ற போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story