ஊட்டியில் காஸ்மிக் கதிர் குறித்த கருத்தரங்கு - விஞ்ஞானி சுபீர் சர்கார் பங்கேற்பு


ஊட்டியில் காஸ்மிக் கதிர் குறித்த கருத்தரங்கு - விஞ்ஞானி சுபீர் சர்கார் பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 3:30 AM IST (Updated: 18 Dec 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் காஸ்மிக் கதிர் குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் விஞ்ஞானி சுபீர் சர்கார் கலந்து கொண்டார்.

ஊட்டி, 

இந்தியாவிலேயே நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தான் காஸ்மிக் கதிர் (அண்டக் கதிர்) ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் காஸ்மிக் கதிர்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி மையம் சார்பில் விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் படிக்கும் பள்ளி மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் காஸ்மிக் கதிர் குறித்த கருத்தரங்கு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த காஸ்மிக் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் விஞ்ஞானியும், பேராசிரியருமான சுபீர் சர்கார் கலந்து கொண்டு அறிவியல் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு காஸ்மிக் கதிர் குறித்து விளக்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், காஸ்மிக் கதிர் என்பது சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய ஒரு உயிராற்றல் பெற்ற அணுத்துகள். இது மின்னூட்டப்பட்ட நுண் துகள்களை கொண்டது ஆகும். அது விண்ணில் காற்று மண்டலத்திற்கு அப்பால் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கின்றன என்றார்.

இதில் புனே ஐயூபாப் ஆராய்ச்சி மைய தலைவர் அனில்குமார் குப்தா மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் இந்தியாவில் ஆண்டுதோறும் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் பேராசிரியருக்கு டாக்டர் ஹோமி பாபா விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு பேராசிரியர் சுபீர் சர்கார் ஹோமி பாபா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.தற்போது இவர் அமெரிக்காவில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி பிரிவில் ஆராய்ச்சியாளராகவும், பேராசிரியராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story