பெங்களூரு அருகே நடைபாதையில் தூங்கிய போது பரிதாபம் கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் சிறுவன் நசுங்கி சாவு 14 பேர் காயம் - டிரைவருக்கு வலைவீச்சு
பெங்களூரு அருகே நடைபாதையில் படுத்து தூங்கிய போது கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் சிறுவன் உடல் நசுங்கி பலியானான். 14 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக தலைமறைவான டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம்நெலமங்களா தாலுகா பெங்களூரு-துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியையொட்டி இருக்கும் நடைபாதையில் நேற்று முன்தினம் இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் படுத்து தூங்கினார்கள். இந்த நிலையில், நள்ளிரவில் அந்த வழியாக வந்த ஒரு கன்டெய்னர் லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் நடைபாதையில் படுத்து தூங்கியவர்கள் மீது லாரி ஏறி இறங்கியது.
இந்த கோர விபத்தில் சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானான். மற்றொரு பெண் உள்பட 14 பேர் காயம் அடைந்தார்கள். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து டிரைவர் ஓட்டிச் சென்று விட்டார். இதுபற்றி அறிந்ததும் நெலமங்களா போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 14 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணையில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 15 பேர் பெங்களூரு-துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தியதும், அவர்கள் 15 பேரும் சுங்கச்சாவடி அருகே உள்ள நடைபாதையில் தான் தினமும் இரவில் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்ததும் தெரிந்தது. அதுபோல, நேற்று முன்தினம் இரவும் நடைபாதையில் படுத்திருந்த போது, அவர்கள் மீது கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பலியான சிறுவன் பெயர் ஜோத்து சவுகான்(வயது 14) என்று தெரிந்தது.
மேலும் படுகாயம் அடைந்தவர்களில் மாலா என்பவர் மட்டும் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மற்ற 13 பேரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story