மாடம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகள் திருட்டு
மாடம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகள், வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் ராஜேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றி கண்ணன் (வயது 31). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் நடைபெற்ற உறவினர் வீட்டு பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் மாலை மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தது.
35 பவுன் நகை திருட்டு
பீரோவை சோதனை செய்தபோது அதில் இருந்த 35 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடுப்போனது தெரியவந்தது. வெற்றி கண்ணன் குடும்பத்துடன் சென்னை சென்றிருப்பதை அறிந்துகொண்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து வெற்றி கண்ணன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரித்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story