பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 18 Dec 2018 4:00 AM IST (Updated: 18 Dec 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தோகைமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தோகைமலை,

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள பாம்பாட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணாமூர்த்தி (வயது 23). பாலவிடுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் சரண்யா (19). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் கர்ணாமூர்த்தியும், சரண்யாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கர்ணா மூர்த்தியும், சரண்யாவும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து நேற்று பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தோகைமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சரண்யா, கர்ணாமூர்த்தியுடன் செல்வதாக கூறினார். பின்னர் போலீசார் சரண்யாவை, கர்ணாமூர்த்தியுடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கடந்த 15-ந்தேதி வெள்ளைச்சாமி தனது மகள் காணாமல்போனது குறித்து பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, நடவடிக்கை எடுக்காததால் அவர் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story