கடலூர் மத்திய சிறையில் ரவுடி திடீர் சாவு


கடலூர் மத்திய சிறையில் ரவுடி திடீர் சாவு
x
தினத்தந்தி 18 Dec 2018 3:30 AM IST (Updated: 18 Dec 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மத்திய சிறையில் பிரபல ரவுடி திடீரென உயிரிழந்தார்.

கடலூர் முதுநகர், 

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் குயிலப்பாளையத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகன் ஏழுமலை என்கிற மைக்கேல்(வயது 36). பிரபல ரவுடி ஆவார். இந்த நிலையில் ஒரு கொலை முயற்சி வழக்கில், ஏழுமலையை ஆரோவில் போலீசார் கடந்த 15-ந்தேதி கைது செய்தனர். பின்னர் அன்றைய தினம் இரவு 9 மணிக்கு கடலூர் மத்திய சிறையில் கொண்டு வந்து போலீசார் அடைத்தனர். விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த ஏழுமலைக்கு நேற்று காலை திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த சிறைகாவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். அங்கு ஏழுமலையை பரிசோதனை செய்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த ஏழுமலை, புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் காலாப்பட்டு ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடையவர் ஆவார். இது தவிர ரவுடி ஏழுமலை மீது ஆரோவில் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் தாதா மணிகண்டன். ரவுடியான இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். கடலூர் மத்திய சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ரவுடி திடீரென உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story