தேவதானப்பட்டி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு


தேவதானப்பட்டி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 3:45 AM IST (Updated: 18 Dec 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தேவதானப்பட்டி, 

தேவதானப்பட்டி அருகேயுள்ள நல்லகருப்பன்பட்டியை சேர்ந்தவர் ராதா. எலக்ட்ரீசியன். இவரது மனைவி செல்வி (வயது 36). நேற்று அதிகாலையில் செல்வி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது 2 பேர் மாடிப்படி வழியாக உள்ளே வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் இருட்டில் ஓடி மறைந்து விட்டனர்.

நல்லகருப்பன்பட்டிக்கு பக்கத்து ஊரான சில்வார்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் முருகன் (40). இவர் குடும்பத்துடன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாததால் வீடு பூட்டிக்கிடந்தது. நேற்று அதிகாலையில் இந்த வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் இருந்த 1 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் இருசம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல்தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story