உல்லாஸ்நகரில் கடையை உடைத்து ரூ.46 லட்சம் செல்போன்கள் கொள்ளை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


உல்லாஸ்நகரில் கடையை உடைத்து ரூ.46 லட்சம் செல்போன்கள் கொள்ளை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Dec 2018 3:50 AM IST (Updated: 18 Dec 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

உல்லாஸ்நகரில் கடையை உடைத்து ரூ.46 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்து சென்ற 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

அம்பர்நாத்,

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் சிவாஜி சவுக் பகுதியில் லட்சுமண் தேஜ்மல் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது. நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் ஊழியர்கள் கடைக்கு வந்தனர்.

அப்போது, கடையின் ஷட்டர் உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் கொள்ளை போயிருந்தன.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் லட்சுமண் தேஜ்மலுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பதறி அடித்துக்கொண்டு கடைக்கு வந்தார்.

பின்னர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாயிருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அதில், அதிகாலை 5 மணியளவில் வந்த 6 பேர் கும்பல் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று செல்போன்களை கொள்ளையடித்துச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. கொள்ளையர்கள் அள்ளிச் சென்ற செல்போன்களின் மதிப்பு ரூ.46 லட்சம் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கெள்ளையர்கள் 6 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story