மனைவி, மகளை கொன்று தற்கொலை: தொழிலாளியின் உடலை வாங்க மகள்கள் மறுப்பு
மனைவி, மகளை கொலை செய்து தற்கொலை செய்த தொழிலாளியின் உடலை வாங்க அவரது மகள்கள் மறுத்து விட்டனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி பெரியார்நகர் சங்கோதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 60). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி வனஜா (50). இவர்களுக்கு வெங்கடேஸ்வரி, ஹேமலதா, தீபாவதி (23) என 3 மகள்கள். இதில் வெங்கடேஸ்வரி, ஹேமலதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
தீபாவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ்கள் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி இரவு வீட்டில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து மனைவி, மகளை பாலகிருஷ்ணன் கட்டையால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரபரப்பான இந்த சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தீபாவதியை வேறு மதத்தை சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை வனஜா செய்தார். இதுபிடிக்காமல் மகள், மனைவியை பாலகிருஷ்ணன் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட வனஜா, தீபாவதி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரது உடல்கள் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் கொடுக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் பாலகிருஷ்ணனின் உடலை வாங்க அவரது மகள்கள் வெங்கடேஸ்வரி, ஹேமலதா ஆகியோர் மறுத்து விட்டனர். தங்களது தாயார் வனஜா, சகோதரி தீபாவதி ஆகியோரின் உடல்களை மட்டும் பெற்றுச்சென்றனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் பாலகிருஷ்ணனின் உடலை வாங்க அவர்கள் மறுத்து விட்டனர். பாலகிருஷ்ணனின் சொந்த ஊர் சென்னை பட்டினப்பாக்கம். அங்கு உள்ள அவரது உறவினர்களிடம் பேசி உடலை ஒப்படைப்பதற்கு போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story