ஆத்தூரில், சொத்து தகராறில் டி.வி. மெக்கானிக் வீடு சூறை பெண் - ஜோதிடர் கைது


ஆத்தூரில், சொத்து தகராறில் டி.வி. மெக்கானிக் வீடு சூறை பெண் - ஜோதிடர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2018 4:00 AM IST (Updated: 18 Dec 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில், சொத்து தகராறில் டி.வி. மெக்கானிக் வீடு சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக பெண் மற்றும் ஜோதிடரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆத்தூர், 

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை சவரிமுத்து தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). டி.வி. மெக்கானிக். இவருக்கும், உறவினர் சாந்தி (45) என்பவருக்கும் இடையே வீடு சம்பந்தமாக சொத்து தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை ரவிச்சந்திரன் வீட்டிற்கு சாந்தி, ஜோதிடர் காளஸ்வரன் (45) மற்றும் 15 வாலிபர்கள் கொண்ட கும்பல் சென்றது. அப்போது ரவிச்சந்திரன் வீட்டில் இல்லை. அவரது மனைவி கிரிஜாதேவி வீட்டில் இருந்துள்ளார்.

அந்த கும்பல் ரவிச்சந்திரன் வீட்டின் முன்பகுதியில் மேற்கூரையின் ஓடுகளை அடித்து நொறுக்கினர். பின்னர் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். இதுதொடர்பாக சாந்தி, காளஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Next Story