அஞ்செட்டியில் 639 பேருக்கு ரூ.1.90 கோடியில் நல உதவிகள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்


அஞ்செட்டியில் 639 பேருக்கு ரூ.1.90 கோடியில் நல உதவிகள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:00 AM IST (Updated: 18 Dec 2018 11:08 PM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டியில் 639 பேருக்கு ரூ.1.90 கோடி மதிப்பில் நல உதவிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி புதிய தாலுகா அலுவலகத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக கடந்த 12-ந் தேதி திறந்து வைத்தார். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு நல உதவிகள் வழங்கும் விழா அஞ்செட்டியில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு 639 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 90 லட்சத்து 776 மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி மலைவாழ் மக்கள் வசிக்கும் கடைக்கோடி பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக அஞ்செட்டி பகுதியை தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்தனர்். இக்கோரிக்கை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு புதிய தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது.

அஞ்செட்டி பகுதிக்கு அதிகமாக சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கெலமங்கலத்தில் புதிய ஐ.டி.ஐ. கடந்தாண்டு தொடங்கப்பட்டது. கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என பல்வேறு வகையான கல்லூரிகளை நமது மாவட்டத்திற்குதமிழக அரசு வழங்கி உள்ளது. இப்பகுதிக்கு புதிய கல்லூரி ஒன்று தேவை. இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் கேட்டு கல்லூரி பெற்று தரப்படும். அரசின் நலத்திட்டங்களை நல்ல முறையில் பயனாளிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அஞ்செட்டியில் ரூ.6.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்கூடம், அஞ்செட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது கழிப்பறை புதிய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், முத்துபாண்டி, பாலசுந்தரம், தனி தாசில்தார் செந்தில் குமரன், துணை தாசில்தார் பரிமேலழகன், வருவாய் ஆய்வாளர் சக்திவேல், தேன்கனிக்கோட்டை முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜாகீர் உசேன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story