தேன்கனிக்கோட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியல் அத்தியாவசிய பொருட்கள் வழங்க கோரிக்கை


தேன்கனிக்கோட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியல் அத்தியாவசிய பொருட்கள் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2018 4:15 AM IST (Updated: 18 Dec 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துகோட்டையில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்குவது இல்லை என புகார் எழுந்தது. இந்தநிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்க கோரி நேற்று பொதுமக்கள் அஞ்செட்டி-குந்துகோட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை தாசில்தார் வெங்கடேசன், துணை தாசில்தார் பரிமேலழகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இனிவரும் காலங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story