கடல் சீற்றம் காரணமாக எண்ணூர் விரைவு சாலை பலத்த சேதம்
கடல் சீற்றத்தால், எண்ணூர் விரைவு சாலையில் அரிப்பு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்தது.
திருவொற்றியூர்,
‘பெய்ட்டி’ புயல் காரணமாக எண்ணூர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. பலஅடி உயரத்துக்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகள், கடலரிப்பு தடுப்பு சுவரையும் தாண்டி சாலையில் வந்து விழுந்தது.
எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கடல் அலை, கடலுக்குள் உள்ள சிறிய கற்களையும், மணலையும் சாலையில் தூக்கி வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் கிடந்த மணலையும், கற்களையும் அப்புறப்படுத்தினர்.
அதேபோன்று எண்ணூர் தாழங்குப்பத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக, கடல்நீர் வெளியேறி எண்ணூர் விரைவு சாலையை தாண்டி வழிந்தோடியது. இதனால் விரைவு சாலையில் அரிப்பு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்தது. இதன் காரணமாக சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story