தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மைய 72-ம் ஆண்டு விழா டி.ஜி.பி. பங்கேற்பு
ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மைய விழாவில் தமிழக டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆவடி,
ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மையம் உருவாகி 72 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அதற்கான விழா நேற்று மாலை ஆவடியில் நடைபெற்றது. விழாவில் தமிழக டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் இவ்வணியில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளுக்கும் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்.
விழாவில் கலைநிகழ்ச்சிகள், யோகா போன்றவை நடைபெற்றது. மேலும் விழாவில் டி.ஜி.பி. ஜாங்கிட், ஏ.டி.ஜி.பி. (ஆயுதப்படை) முகமது ஷகில் அக்தர், மற்றும் ஏ.டி.ஜி.பி.க்கள் சைலேந்திரபாபு, சீமா அகர்வால், ஜாபர்சேட், சந்தீப்ராய் ரத்தோர், சுனில்குமார்சிங், அபய்குமார்சிங், அசுதோஸ்சுக்லா, தமிழக காவலர் குடியிருப்பு வாரிய தலைவர் மஞ்சுநாத், சென்னை சரக ஆயுதப்படை காவல்துறை துணைத்தலைவர் ஜெய கவுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தளவாய் அந்தோணி ஜான்சன் ஜெயபால் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story