ஆறுமுகநேரியில் விபத்தில் தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி
ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கியதில் தூக்கி வீசப்பட்ட தனியார் நிதி நிறுவன மேலாளர் பரிதாபமாக பலியானார்.
ஆறுமுகநேரி,
ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கியதில் தூக்கி வீசப்பட்ட தனியார் நிதி நிறுவன மேலாளர் பரிதாபமாக பலியானார்.
நிதி நிறுவன மேலாளர்
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் கழுநீர்குளம் சோழன் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலையில் அலுவலக பணிக்காக தனது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தார்.
பரிதாப சாவு
ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள வேகத்தடையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார். உடனே அவருக்கு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story