வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா... என கோஷமிட்டு சாமியை தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலுக்கு புதிதாக 5 நிலை ராஜகோபுரம் மற்றும் சொர்க்கவாசல் 2013-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சன்னதி தெருவிற்கு வந்து, கோவில் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கம்பத்தை 3 முறை வலம் வந்து ஆண்டாள் சன்னதியில் சேவை சாதித்தார். சொர்க்கவாசல் திறந்த பின்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மூலவர் பெருமாளையும், உற்சவ பெருமாளையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) துவாதசி ஆராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பெருமாள் பக்தர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள லட்சுமிநாராயண பெருமாள் கோவில், லாடபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அம்மாபாளையம் பெருமாள் கோவில், எசனையில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவில், தழுதாழை வரதராஜபெருமாள், அரும்பாவூர், பூலாம்பாடி, குன்னம் வரதராஜபெருமாள் உள்ளிட்ட வைணவ கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடந்தது. இன்று துவாதசி ஆராதனை நடக்கிறது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத வீரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திருப்பள்ளியெழுச்சியும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து பரமபத சொர்க்க வாசல் காலை 6.30 மணியளவில் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் பெருமாளை வணங்கினர். கோவில் உள் பிரகாரத்தில் வீரநாராயண பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோவில், சம்போடை கிராமத்தில் சொர்க்க பள்ளத்தில் உள்ள வீரநாராயண பெருமாள் கோவிலிலும் பரமபத சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அரியலூரில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4 மணி அளவில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தசாவதார மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டார். பின்னர் அரியலூர் நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள், ஊழியர்கள் சார்பில் பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து பரமபதவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கண்ணாடி சேவை நடந்த பிறகு சாமி நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா... என்று கோஷமிட்டு பரவசம் அடைந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story