மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா?, மாற்றி அமைப்பதா? என்பது குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு தினேஷ் குண்டுராவ் பேட்டி
மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா?, மாற்றி அமைப்பதா? என்பது குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தினேஷ் குண்டுராவ் கூறினார்.
பெங்களூரு,
மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா?, மாற்றி அமைப்பதா? என்பது குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தினேஷ் குண்டுராவ் கூறினார்.
மந்திரிசபை விரிவாக்கம்
பெலகாவியில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்த பிறகு அக்கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திட்டமிட்டபடி வருகிற 22-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுவது உறுதி. மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது அதை மாற்றி அமைப்பதா? என்பது குறித்து கட்சி மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும்.
சுமுகமாக முடிந்தது
சரியாக செயல்படாத மந்திரிகளை நீக்குவது, புதிய மந்திரிகளை நியமிப்பது என அனைத்து பணிகளையும் காங்கிரஸ் மேலிடமே மேற்கொள்ளும். இன்று(அதாவது நேற்று) நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சுமுகமாக முடிந்தது. எம்.எல்.ஏ.க்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் இருப்பதாக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். இந்த பிரச்சினையை தீர்ப்பதாக சித்தராமையா உறுதியளித்தார். சில எம்.எல்.ஏ.க்கள், கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் முன் அனுமதி பெற்று வரவில்லை.
சித்தராமையாவுக்கு கடிதம்
சட்டமன்ற கட்சி கூட்டத்தில் அனைவரும் ஆஜராவது இல்லை. மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியும், சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி, கூட்டத்திற்கு வர இயலவில்லை என்று தெரிவித்தார்.
அவர் மந்திரிசபை கூட்டம் மற்றும் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்து வருவதை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.
Related Tags :
Next Story