வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் தரிசனம்


வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 19 Dec 2018 5:18 AM IST (Updated: 19 Dec 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மும்பை, 

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சொர்க்கவாசல் திறப்பு

மும்பையில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலையில் நடந்தது. செம்பூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் அதிகாலை 5.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அப்போது, சொர்க்கவாசலில் உற்சவர் பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை மற்றும் திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்தார்.

பக்தர்கள் தரிசனம்

அப்போது, வெளியே திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். மும்பை பனஸ்வாடியில் உள்ள வேங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 1.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

பின்னர் 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பெருமாள் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதேபோல மும்பை மற்றும் தானே மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story